
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை
பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்து வந்தார்.
இந் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த டிரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

