
வன விலங்குகளை வேட்டையாடல் ; தொலைபேசி இலக்கம் அறிமுகம்
வன விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கமொன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறும் இந்த தொலைபேசி இலக்க 24 மணிநேரமும் சேவையில் இருக்குமெனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

