இந்தோனேசியாவில் படகு கடலில் மூழ்கி விபத்து ; 4 பேர் பலி

இந்தோனேசியாவில் படகு கடலில் மூழ்கி விபத்து ; 4 பேர் பலி

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )