அலட்சியமாக பஸ்ஸை ஒட்டிய பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவி இடைநீக்கம்

அலட்சியமாக பஸ்ஸை ஒட்டிய பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவி இடைநீக்கம்

கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டிச்சென்ற சாரதி மற்றும் நடத்துனர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸின் மிதிப்பலகையிலிருந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, ​​ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் வாகனம் செலுத்தியதே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது,

இதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண பயணிகள் வீதி போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக .கூறப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )