
பிரித்தானிய குரான் பிறீயை வென்ற லான்டோ நொரிஸ்
பிரித்தானிய குரான் பிறீயை மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் வென்றுள்ளார். நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்தே இவ்வெற்றியை பிரித்தானியாவின் நொரிஸ் பெற்றதோடு, பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரன் அணி ஓட்டுநர் ஒஸ்கார் பியாஸ்திரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை 19ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த செளபர் அணியின் நிக்கோ ஹல்கன்பேர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 234 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி காணப்படுகின்றார்.
226 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொரிஸும், 165 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
CATEGORIES Sports News

