
14 நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும்
14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது” என்று அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES World News

