வட மாகாண பாடசாலைகளுக்கு 172 இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள்

வட மாகாண பாடசாலைகளுக்கு 172 இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள்

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் ஏற்பாட்டினால், வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, 172 இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்களை அமைக்கும் திட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அண்மையில் (23) இடம்பெற்றது.

தேசிய புத்தாக்கம், சுற்றாடல் அமைப்பை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் (SLIC) தலைமையின் கீழ் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, பாடசாலை மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க திறன்களை வளர்ப்பதற்காக புதிய வழியில் பாடசாலைகளில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் சங்கங்களை (YIC) நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டம் அண்மையில் (23) ஆரம்பிக்கப்பட்டது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )