போயா தினத்தையிட்டு நாடு முழுவதும் 8355 தன்சல்கள்

போயா தினத்தையிட்டு நாடு முழுவதும் 8355 தன்சல்கள்

இன்றைய எசல போயா தினத்தையிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி சுகாதாரமான முறையில் தன்சல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் தன்சல் இடம்பெறும் இடங்களின் துப்பரவு குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இந்த ஆய்வுப் பணிகளில் சுமார் 2,000 பொது சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )