கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டதுவிண்ணப்பதாரிகள் 1962 இலக்கத்திற்கு அழைக்கவும்

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டதுவிண்ணப்பதாரிகள் 1962 இலக்கத்திற்கு அழைக்கவும்

கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்த கணினி கட்டமைப்பு கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

கணினி கோளாறு விரைவாக சரிசெய்யப்பட்டு, திங்கட்கிழமை பெப்ரவரி 16ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் தொடங்கும் என்று திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு மற்றும் விசா (Visa) வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )