
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது
திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணை செய்ததில் இந்தக் கடத்தல் சிறிது காலமாக நடந்து வருவதும், போதைப்பொருள் பல பகுதிகளுக்கு விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka