
ஆர்ஜென்டினாவில் கனமழை ; 10 பேர் பலி
ஆர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதுபற்றி அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறையமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி குழுக்கள் செல்வது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தச் சூழலில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News