
13,392 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 9A சித்தி
இம்முறை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையில் 13,392 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் .இது பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் 4.15% மாகும் .
இன்று வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% சதவீதமாகும்.
மாகாண ரீதியாக மாணவர் தேர்ச்சி சதவீதம்
மேல் மாகாணம் 74.47%
மத்திய மாகாணம் 73.91%
தென் மாகாணம் 75.64%
வட மாகாணம் 69.86%
கிழக்கு மாகாணம் 74.26%
வடமேல் மாகாணம் 71.47%
வட மத்திய மாகாணம் 70.24%
ஊவா மாகாணம் 73.14
சபரகமுவ மாகாணம் 73.47%
பாட ரீதியாக தேர்ச்சி சதவீதம்
பௌத்தம் 83.21%
சைவநெறி 82.96%
கத்தோலிக்கம் 90.22%
கிறிஸ்தவம் 91.49%
இஸ்லாம் 85.45%
ஆங்கிலம் 73.82%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%
வரலாறு 82.17%
அறிவியல் 71.06%
கணிதம் 69.07%
அனைத்து பாடங்களிலும் 2.34% மான மாணவர்கள்
சித்திபெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

