இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி

இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி

பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர், எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை விஜயத்தின் பின்னர் அவர் இந்தோனேசியாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம் பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )