ஷாருக்கானின் இலங்கை விஜயம் இரத்து

ஷாருக்கானின் இலங்கை விஜயம் இரத்து

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் துரதிஷ்டவசமாக, எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், இந்த நிகழ்வில் அவர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என Talent Agency நிறுவனமான WizCraft தெரிவித்துள்ளது.

Talent Agency நிறுவனமான WizCraft வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

” ஷாருக்கான், அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட, எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால், City of Dreams Sri Lankaவின் ஆரம்ப நிகழ்வில் திட்டமிட்டபடி கலந்துகொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கையும் அதன் அற்புதமான மக்களும் ஷாருக்கான் மனதில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர், மேலும் இந்த ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர் உண்மையாகவே உற்சாகமாக இருந்தார். City of Dreams Sri Lanka நிர்வாகத்திற்கும், அவர்களின் அளவற்ற உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

எதிர்காலத்தில் ஷாருக்கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.”

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )