உக்ரேனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

உக்ரேனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

உக்ரேனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று (17) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரேனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர்.

ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்தார். மார்ச் 2020 முதல் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிஹால்,உக்ரேன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )