
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவிற்கு விளக்கமறில்
கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை அடுத்த மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மத்துகம நீதவான் அசங்க ஹெட்டியவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
போலியான தரவுகளை வழங்கி பதிவுசெய்யப்பட்ட ஜீப் தொடர்பாக செயல் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு சுமார் 4 மாதங்களுக்கு முன்பு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மத்துகம நகரில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று பிற்பகல் அப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது , ஜீப்பை ஓட்டிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வாகனம் மதுகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது .
கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான என தெரிவிக்கப்பட்டது.
குறித்த ஜீப் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தவறான தரவுகளைச் சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை சேர்ந்த ஒருவர் பதிவுசெய்யதலின்போது சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பை, அவரது மகன் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ரசிக விதான, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து குறித்த ஜீப்பை வாங்கியதாகக் கூறினார்.
இதன்படி நேற்று மதியம் களுத்துறை, நாகொடவில் உள்ள ரோசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவரும் அவரது கணவரும் அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ரசிக விதான இன்று மதுகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

