
நாவலபிட்டியவில் மூடப்பட்ட ரயில் கடவை வழியாக பஸ்ஸை ஓட்டிசென்ற சம்பவம் cctv யில் சிக்கியது
நாவலப்பிட்டி வரகாவ பகுதியில் உள்ள மூடப்பட்ட ரயில் கடவை வழியாக ஏற்படும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பஸ்ஸை ஓட்டிச் சென்ற சாரதியை நாவலப்பிட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம்திகதி இந்த பஸ் கினிகத்தேனையில் உள்ள லக்சபன பகுதியிலிருந்து கண்டிக்கு பயணித்தது.
குறித்த பஸ் வரகாவ ரயில் கடவையை அடைந்தபோது ரயில்வே பாதுகாப்பு வாயில் மூடப்பட்டிருந்தது.
எனினும் பஸ் சாரதி எதிர் திசையில் ரயில் கேட்டில் உள்ள ஒரு சிறிய இடைவெளி வழியாக பஸ்ஸை ஓடிச்சென்றுள்ளார்.
குறித்த பஸ் அந்த இடத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த பயணிகள் ரயில் புறப்பட்ட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இடமபெற்ற இந்த சம்பவம் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த cctv கேமராவில் பதிவாகியுள்ளது,
அத்துடன் ரயில்வே பாதுகாப்பு வாயிலில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் சம்பவம் குறித்து நாவலப்பிட்டி போலீசாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
இதனடிப்படையில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட்டுளார்.
சந்தேக நபருக்கு எதிராக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றம் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

