ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்

