யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )