
ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைந்துவிட்டோம் ; ஏமன் இராணுவம்
இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மத்தியகிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், திடீரென ஈரானின் போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் ஈரான் எச்சிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில், போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என்று ஈரானுக்கு ஆதரவாக ஏமன் இராணுவம் அறிவித்துள்ளது.
ஏமனில், ஹவுதி அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

