சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றபோது இன்று மனித எச்சங்கள் வெளிப்பட்டதையடுத்து கண்ணிவெடி அகழ்ந்தெடுக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில், கடந்த வியாழக்கிழமை நிலக்கீழ் கண்ணிவெடி அகழ்தெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன .

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் முகாமிட்டு கண்ணிவெடி அகழும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக ண்ணிவெடி அகழும் பணிநிறுத்தப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் இந்த மனித எலும்புப் பாகங்கள் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )