
20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி அரேபிய இளவரசர் அல் வாலீத் உயிரிழந்தார்
சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் நேற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்ட இவர் 2005-ம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக கல்விகற்றபோது இந்த கார் விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதை அவருடைய தந்தையான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.
22ஆம் திகதிவரை 3 நாட்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்காக, அல்-பக்ரியா மாவட்டத்தில் உள்ள அரண்மனையில் உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல்அஜீசின் கொள்ளு பேரனான இந்த இளவரசர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி பிறந்தார். இளவரசருக்கு சில மாதங்களுக்கு முன்பு 36 வயது பிறந்தது.
உயிர்காக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தபோது சில சமயங்களில் இளவரசரிடம் அசைவு ஏற்பட்டபோது இளவரசர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்ததாக
தெரிவிக்கப்பட்டது..
இதற்காக அவருடைய தந்தை காத்திருந்தபோதும், சிகிச்சை பலனின்றி இளவரசர் மரணம் அடைந்தமை அந்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயர செய்தியாகும்

