
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
கேகாலை, கலிகமுவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (21) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் 21 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

