
யாழ் செம்மணியில் இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு இதுவரை 90 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றைய தினம் இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணியில் இதுவரையில் 90 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.
இனப்படுகொலையின் சாட்சியமாக கூறப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 20 ஆவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய அகழ்வுப்பணிகளின்போது இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தமாக 5 எலும்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய அகழ்வு பணிகளின் போது சித்துப்பாத்தி பகுதியில் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக காணியை துப்புரவு பணியும் இடம்பெற்றது.

