பஸ் லலியா எனப்படும் லலித் கன்னங்கரவின் 4 சகாக்கள் கைது

பஸ் லலியா எனப்படும் லலித் கன்னங்கரவின் 4 சகாக்கள் கைது

துபாயில் இருந்து , நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை நடத்திச் செல்வதாக கூறப்படும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு நபர்கள் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹன்வெல்ல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித் தடையைப் ஏற்படுத்தி சோதனைகளை மேற்கொண்டபோது வீதித் தடையைத் தவிர்த்து தப்பிச் செல்ல முயன்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் 7 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )