
பண்டிகைக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு
பண்டிகைக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு 4000ரூபாவிற்குட்பட்ட விசேட முற்பணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
பண்டிகைக் காலத்திற்கான இந்த முற்பணம் ஒவ்வொரு ஆண்டும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது,
4000ரூபாவிற்கும் அதிகமில்லாத இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் திகதி முதல் பிப்ரவரி இறுதி நாளுக்குட்பட்ட பகுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் .
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த முன்பணம் பத்து மாத தவணைகளில், 8 சதவீத வருடாந்த வட்டியுடன் வசூலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

