
4000 போலி யுவான் நாணயத்தாள்கள் – போலி இரத்தின கற்களுடன் இரு சீன நாட்டவர்கள் இலங்கையில் கைது
ரத்தினபுரி திருவானகெட்டிய பகுதியில் 100 ஜப்பானிய யுவான் நாணய தாள்கள் 4000 த்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹாவத்த போலீஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது .
சந்தேக நபர் 28 வயது சீன நாட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை அதே பகுதியில் பகுதியில் 06 கிலோகிராம் 32 கிராம் போலி ரத்தினக் கற்களுடன் மற்றொரு சீன நாட்டை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 01 ஐபேட் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கஹாவத்தை போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

