மஸ்கெலியாவில் சரிந்து விழுந்த மண்மேட்டில் புதையுண்டஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டனர்

மஸ்கெலியாவில் சரிந்து விழுந்த மண்மேட்டில் புதையுண்டஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டனர்

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த்தில் . மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மஸ்கெலியா பகுதியில் நேற்று பெய்த கடும் மழையில் குடியிருப்பு பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்தது.
இன்று மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மதியம் 12:00 மணியளவில் மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்ட பொது மக்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )