இன்று நள்ளிரவுக்குப் பிறகு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளை நடத்துவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

இன்று நள்ளிரவுக்குப் பிறகு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளை நடத்துவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

இன்று நள்ளிரவுக்குப் பிறகு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்காக கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சைக்கான மாதிரி கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல்,பரீட்சைத்தாள்களில் எவ்வாறான கேள்விகள் வழங்கப்படும் எனக் கூறும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல் அல்லது மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அவற்றை வைத்திருப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயல்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற ஹாட்லைனுக்கு அல்லது பாடசாலை பரீட்சைகள் மற்றும்பெறுபேறுகள் அமைப்பின் கிளை எண் 0112 784208 அல்லது 0112 784537 ஆகிய எண்களில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )