அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் உதவிகளை பெற்றுக்கொள்ள

அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் உதவிகளை பெற்றுக்கொள்ள

இந்த நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நிதி உதவிகளை வைப்புச் செய்வதற்கான வங்கிக் கணக்கு எண்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உதவித் தொகையை உள்ளூர் நாணயத்திலும் (ரூபாய்) அமெரிக்க டொலரிலும் வைப்புச்
செய்யலாம். இதற்காக இரண்டு கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (28) பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள்அமைச்சர் விஜித ஹெராத்துடன் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது
இந்த தகவல்கள் வழங்கப்பட்டது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )