பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்

பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

”ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு.

எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும். நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம். ” இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )