
நான் அரசியல்வாதி அல்ல, அமைதியின் தூதுவன்அப்பாவி மக்கள் படும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது நோக்கம்-டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ துணிச்சலான பதிலடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை 14ஆம் லியோ தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அல்ஜீரியாவிற்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக விமானத்தில் பயணிக்கும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டிரம்ப்பின் விமர்சனங்களைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்தார்.
நான் ஒரு அரசியல்வாதி அல்ல; திருச்சபையின் தலையாய பணியே உலகெங்கும் அமைதியைப் பரப்புவதுதான்.
எனவே, டிரம்ப் நிர்வாகத்துடன் தேவையற்ற அரசியல் விவாதங்களில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
போர் மற்றும் மோதல்களால் அப்பாவி மக்கள் படும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வத்திக்கான் வரலாற்றிலேயே அமெரிக்காவில் பிறந்த முதல் திருத்தந்தை பொப்
அல்ஜீரியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் போப் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
ஈரான் மீதான போர் மேகங்கள் விலக வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபருக்கும், அதே நாட்டைச் சேர்ந்த திருத்தந்தைக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

