
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் கயந்த கருணாதிலக்க ஆஜர்
வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முன்னைய அரசாங்ககாலத்தில் விவசாய அமைச்சுக்கான அலுவலகம் ஒன்றை இராஜகிரிய பகுதியில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட விதம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கயந்த கருணாதிலக்க முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
இன்று காலை 9 மணியளவில் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

