தனது நாட்டின் அதி சக்திவாய்ந்த ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்திய வடகொரிய ஜனாதிபதி

தனது நாட்டின் அதி சக்திவாய்ந்த ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்திய வடகொரிய ஜனாதிபதி

தனது நாட்டு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள அதி சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பாரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடைபெற்றது

இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா ‘ஹ்வாசொங்-20’ Hwasong-20 எனப்படும் அதன் சகதி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது.

இந்த ஏவுகணை தனது நாட்டின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறனுடையது மற்றும் சுமார் 15,000 கி.மீ. தூரம் வரை தாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் ஏனைய தரையிலிருந்து வான் மற்றும் தரைப் பகுதிக்கு ஏவக்கூடிய ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிம் ஜாங் உன், யுக்ரைனில் ரஷ்யாவிற்காக போரிடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என தெரிவித்ததாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )