
தங்கத்தின் விலையில் சரிவு
கடந்த சில நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று (11) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 336,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 309,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

