
கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு அறிவித்தல்
காவடி பெரஹெராவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை
பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு ஆலய வருடாந்த எசல பெரஹெர காவடி பெரஹெரா நாளை மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற உள்ளதுடன் இறுதி ரந்தோலி பெரஹெரா நாளை மறுநாள் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற உள்ளது.
பெரஹெராவின் போது கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி மூடப்படுவதால், இந்தக் காலப்பகுதியில் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க மாற்று வழிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
1 ) மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மெத்தவத்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள மாத்தறை யட்டியான வீதிக்குத் திருப்பிவிடப்பட்டு, கெக்கணதுர சந்தியிலிருந்து வெஹெல்ல வீதியிலிருந்து டிக்வெல்ல வரை பயணிக்க முடியும் .
2) தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்களை தலல்ல தொழில்நுட்பக் கல்லூரி பகுதி வழியாக , நாவோடுன்ன வீதி வழியாக வியனருவ சந்தி பின்னர் , டிக்வெல்ல வெஹெல்ல வீதி வழியாக கெக்கனதுர சந்திக்குச் சென்று, கெக்கனதுர மாத்தறை சாலை வழியாக மாத்தறைக்கு பயணிக்க முடியும் என மாற்று வழிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

