
அளுத்கம ரயில் கடவையில் ரயிலுடன் மோதிய வேன் பெண்ணொருவர் காயம்
அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று காலை ஒரு சிறிய வேன் ஒன்று ரயிலில் மோதிய விபத்தில் வேனை ஓட்டிச் சென்ற பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதிப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு வேனில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

