”புலமை பரீட்சையில் 2ஆவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும்”  பரீட்சைகள் ஆணையர் நாயகம் நாளை நடைபெறும் பரீட்சை தொடர்பில் விளக்கமளித்தார்

”புலமை பரீட்சையில் 2ஆவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும்” பரீட்சைகள் ஆணையர் நாயகம் நாளை நடைபெறும் பரீட்சை தொடர்பில் விளக்கமளித்தார்

பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி ,நாளை நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்த இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கீழ்கண்டவாறு
தெளிவுபடுத்தினார்.

”பரீட்சை காலை 9:30 மணிக்கு தொடங்கும். இருப்பினும், அனைத்து பிள்ளைகளும் காலை 8:30ற்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருவதுடன் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும்.”

” பிள்ளைகளுக்கு முதலில் இரண்டாவது வினாத்தாள் வழங்கப்படும். இரண்டாவது வினாத்தாள் காலை 9:30ற்கு ஆரம்பித்து காலை 10:45ற்கு நிறைவடையும்.”

“அதன் பிறகு, அரை மணி நேர இடைவேளை வழங்கப்படும் .”

” இடைவேளையின் பின்னர் முதல் வினாத்தாள் காலை 11:15ற்கு தொடங்கும். இந்த வினாத்தாளுக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
அந்த வினாத்தாள் மதியம் 12:15ற்கு முடிவடைவதோடு முழு பரீட்சையும் முடிவடையும்”.

“பரீட்சையின் போது ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால், 117 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைத்து எங்களுக்குத் தெரிவிக்கலாம்.” பரீச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )