பலாங்கொட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வயது குழந்தை பலிதாயும் மரணத்தில் சந்தேகம் என போலீசார் தெரிவிப்பு

பலாங்கொட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வயது குழந்தை பலிதாயும் மரணத்தில் சந்தேகம் என போலீசார் தெரிவிப்பு

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவையில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டனர்.

தீ விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் தாயும் இந்த தீ விபத்தில் சிக்காததால் குழந்தையில் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தையின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து சென்றதாகவும் தாய் வேறொரு நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று வீடு திரும்பியபோது தகராறு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையின் உடலின் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )