பஸ் ஓட்டுனர்கள் தவறு செய்தால்தட்டிக்கேட்க பஸ்களில் பொருத்தப்படும்AI தொழிநுட்பம்

பஸ் ஓட்டுனர்கள் தவறு செய்தால்தட்டிக்கேட்க பஸ்களில் பொருத்தப்படும்AI தொழிநுட்பம்

அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கதிர்காமத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொர்பில் தெரிவித்த அவர், முதல் கட்டமாக பஸ்களில் 40 AI தொழில்நுட்ப சாதனங்கள் நிறுவப்பட உள்ளதாகக் கூறினார்.

“AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஓட்டுநர்கள் பஸ்ஸை செலுத்துக்கொண்டிருக்கும் போது சோர்வடைந்தால், தூங்கினால் அல்லது அவர்களின் கண்கள் மூடினால் மற்றும் ஓட்டுநர் பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விஷயங்களைச் செய்தால், இந்த AI தொழிநுட்ப அமைப்பு ஓட்டுநர்களுக்கு அதை நினைவூட்டும்.
இந்த தொழிநுட்பத்தை சில நிறுவனங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அவை இலங்கையின் பொதுப் போக்குவரத்தில், குறிப்பாக SLTB மற்றும் மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்களில் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, அந்த நிறுவனங்களுடன் நாம் கலந்துரையாடிய பிறகு, அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை எமக்கு வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர்.
அவற்றில் 40 சாதனங்கள் முதல்கட்டமாக அரச மற்றும் தனியார் பஸ்களில் பொறுத்தப்படவுள்ளன”
என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )