பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி

பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் கம்பளையில் பதிவாகியுள்ளது.

கம்பளை மில்லகாமுல,துந்தெனிய,காவத்த ,பகுதிகளில் கிராமத்திற்க்கு பொறுப்பான குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று (12) காவத்த பிரதேசத்தில் பொலிஸ் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அங்கு சென்றுள்ளார்.

அந்த சந்தரப்பத்தில் பொலிஸ் அதிகாரிக்கு காவத்த கிராம சேவகர் மூலமாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு காவத்த கிராமிய வங்கி கிளைக்கு முன்பாக நபர் ஒருவர் குடித்து விட்டு அநாகரிகமான முறையில் பேசுகின்றார் என்று கூறியுள்ளனர்,

இதனையடுத்து குறித்த பொலிஸ் அங்கு சென்று அந்த நபரை இங்கு இப்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று கூறி எச்சரிக்கை விடுத்து இருந்த போது அந்த நபர் மேலும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு இருந்த சந்தரப்பத்தில் பொலிஸ் அதிகாரி கம்பளை பொலிஸ் நிலையத்திற்க்கு தொலைபேசி மூலம் அறிவித்து குழுவினர்களை வரவழைக்க முயற்சி செய்து கொண்டு இருந்த சந்தரப்பத்தில் 44 வயதுடைய குடி போதையில் இருந்த நபர் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதன் போது பொலிஸ் அதிகாரியின் உதட்டில் காயம் ஏற்ப்பட்டதை அடுத்து அவரை உடனடியாக கைது செய்து கம்பளை பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தின் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் ,

காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆலோசனைக்கு அமைய கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிக்காட்டலுக்கு அமைய கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )