
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் ; வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை (15) முதல் 14,21,745 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மொத்தமாக 11,27,59,73,750 ரூபாய் (11,276 மில்லியன் ரூபாய்) வங்கிகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளதாகவும், பயனாளிகள் நாளை முதல் இந்தப் பணத்தைப் பெறலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

