
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 1904 க்கு அழைக்கவும்
நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், ‘1904’ என்ற ஹாட்லைன் எண்ணின் மூலம் தகவல் வழங்கலாம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு முகாம்களில் இயங்கும் பாடசாலைகள் மற்றும் இன்னும் ஆபத்து நிலை உள்ள சில பள்ளிகளைத் தவிர, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் தேவைகள் தடையின்றி பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

