
தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
இயக்குநர் பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
CATEGORIES Cinema

