
கொழும்பில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம்
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கொண்டாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேசிய கொடியை ஏற்றி, இந்திய தேசிய இராணுவத்தின் தியாகங்களை நினைவுகூர்ந்து கொழும்பிலுள்ள IPKF நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் சுதந்திர தின முன்னோடி உரையின் பகுதிகளை உயர்ஸ்தானிகர் வாசித்தார். சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் மாணவர்கள் தேசபக்தி நிகழ்ச்சிகளை வழங்கினர். இலங்கை கடற்படை இசைக் குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைத்து நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.









CATEGORIES Sri Lanka

