ரஷ்ய – யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப்பின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் புடின்

ரஷ்ய – யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப்பின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் புடின்

ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையிலான
போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டுள்ள ஆர்வம் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அலாஸ்காவில் இரு உலகத் தலைவர்களுக்கிடையேயான முக்கிய சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளாடிமிர் புடின் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தக்கு மாஸ்கோவிற்கு
வருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ,
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ,இந்தப் பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையே இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வராவிட்டால் நான் மகிழ்ச்சி அடைய மாட்டேன் என ,இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான பேர்ச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின், ஆகியோருக்கிடையில் அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜில் Anchorage நடைபெற்ற இந்த சந்திப்பு 2019 க்குப் பிறகு நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும் எனவும் 2018 ஹெல்சின்கி சந்திப்புக்குப் பிறகு அவர்களின் முதல் தனி உச்சி மாநாடு இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆறு அல்லது ஏழு மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே இந்த இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )