குருக்கள்மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது

குருக்கள்மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக சகிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , கிராம மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )