வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று காலை முதல் நண்பகல் வரை மாத்திரம் ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஹர்த்தாலுக்கு சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )