கூரிய ஆயுதத்தால் 43 வயது நபரை குத்திகொலை செய்த முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு மரண தண்டனை

கூரிய ஆயுதத்தால் 43 வயது நபரை குத்திகொலை செய்த முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு மரண தண்டனை

கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரைக் குத்திக் கொலை செய்த 43 வயது முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி , களனி பிரதேசத்தில் ரோய் பீரிஸ் என்ற நபரை கூறிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை வழங்கிய கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )