
ஹட்டன் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டத்திற்கு 500 மில்லியன்
ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி நகரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பழைய நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க உத்தியோகபூர்வ வதிவிடங்களை புதிய நகரப் பகுதிக்கு இடம்மாற்ற முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இவ்வாண்டு வரவுசெலவு திட்டத்திலிருந்து ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம் என ஜனாதிபதி தொிவித்துள்ளார். .
CATEGORIES Sri Lanka

